வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை
காங்கயம் வார சந்தையில் வரத்து அதிகமானதால் தக்காளி கிலோ ரூ.80-க்குவிற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் வார சந்தையில் வரத்து அதிகமானதால் தக்காளி கிலோ ரூ.80-க்குவிற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் வாரசந்தை
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அணைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள், தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது.
தக்காளி கிலோ ரூ.80
இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.
நேற்று கூடிய வார சந்தையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளியின் விலை சென்ற வாரத்தை காட்டிலும் ரூ.20 குறைந்தது. வார சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் தக்காளியின் வரத்து அதிகரித்து உள்ளதால் வரும் வாரங்களில் தக்காளியின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும், இதேபோல் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலையும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.