பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி 1 கிலோ ரூ.90-க்கு விற்பனை


பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி 1 கிலோ ரூ.90-க்கு விற்பனை
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி 1 கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

விளைச்சல் குறைவால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து காணப்படுகிறது. பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி சந்தையில் நேற்று மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.25-க்கும், சீனி அவரைக்காய் ரூ.22-க்கும், புடலங்காய் ரூ.13-க்கும், அவரைக்காய் ரூ.45-க்கும், பாகற்காய் ரூ.45-க்கும், சுரைக்காய் ரூ.12-க்கும், பூசணிக்காய் ரூ.17-க்கும், தடியங்காய் ரூ.14-க்கும், கறிவேப்பிலை ரூ.13-க்கும், மிளகாய் ரூ.75-க்கும், பல்லாரி ரூ.25-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும் விற்பனையானது.


Next Story