கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி


கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
x

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதில் தக்காளி விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளதால், அதன் வரத்தும் அதிகரித்து இருக்கிறது.

கடந்த 10 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 80 முதல் 90 லாரிகளில் தக்காளி வரத்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரத்து அதிகரித்து இருப்பதால், அதன் விலையும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

இன்றைய தினம் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக விளைச்சல், வரத்து அதிகரிப்பு ஆகிய காரணங்கள் மட்டுமல்லாது, ஆடி மாதத்தில் சுப முகூர்த்தங்கள் அதிக அளவில் இல்லததாலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story