கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.20 குறைந்தது..!
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.20 குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது. தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
இதைத்தொடர்ந்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கியது. அங்கு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.130க்கு விற்ற நிலையில், இன்று ரூ.110க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.110க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ.200, இஞ்சி விலை ரூ.220, பூண்டு விலை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.