சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை


சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை
x
தினத்தந்தி 10 July 2023 1:13 AM IST (Updated: 10 July 2023 5:01 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம்

சேலம்

சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை

தக்காளி விலை 'கிடுகிடு'வென உயர்ந்து ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகி, மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறது. 'தக்காளி வியாபாரியை திருமணம் செய்து கொள்ள பெண்கள் போட்டாபோட்டி' என்று மீம்ஸ்கள் பறக்கும் அளவுக்கு தக்காளி விலை பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.85 வரைக்கும் விலை குறைந்திருந்தது.

அதேசமயம், வெளி மார்க்கெட்டில் ரூ.100 வரைக்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், உழவர் சந்தைகளில் தக்காளி விலை நேற்று மீண்டும் உயர்ந்து காணப்பட்டது. அதாவது, ஒரு கிலோ தக்காளி ரூ.10 அதிகரித்து ரூ.95 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குறைய வாய்ப்பு இல்லை

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், தொடர் மழையால் அண்டை மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டதின் எதிரொலியாக தக்காளி வரத்து 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வரத்து கொஞ்சம் உயர்ந்த நிலையில், தக்காளி விலை ரூ.90 ஆக குறைந்தது. பின்னர் ரூ.10 விலை அதிகரித்தது.

இப்போது தக்காளி இன்னும் ரூ.10 அதிகரித்து, ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து சீராகும் வரை தக்காளி விலை கொஞ்சம் ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படும். எதிர்பார்த்தபடி விலை குறைய வாய்ப்பு இல்லை, என்றனர். சேலத்தில் உள்ள சில்லறை மளிகை கடைகளில் தக்காளி விலை ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story