தொப்பூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது


தொப்பூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு  நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது
x

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல் அமலுக்கு வந்தது.

கட்டணம் உயர்வு

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டண உயர்வு நேற்று அதிகாலை முதல்அமலுக்கு வந்தது.

அதன்படி கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை ஒரு முறை கடந்து செல்வதற்கான கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.120-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு நாளில் பலமுறை கடப்பதற்கான கட்டணம் ரூ.180-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகு ரக மோட்டார் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், மினி பஸ்கள் ஒருமுறை சுங்கச்சாவடியை கடப்பதற்கான கட்டணம் ரூ.185-ல் இருந்து ரூ.210-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஒரே நாளில் பலமுறை சுங்கச்சாவடியை கடக்க ரூ.315 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் வாகனங்கள்

பஸ்கள், டிரக்குகள் ஒருமுறை சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கான கட்டணம் ரூ.365-ல் இருந்து ரூ.420-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஒரே நாளில் பலமுறை சுங்கச்சாவடியை கடக்க ரூ.630 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல ஆக்சில் கொண்ட வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியை கடக்க ரூ.675-ம், ஒரே நாளில் பலமுறை கடக்க ரூ.1,010-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன் ஆகிய உள்ளூர் வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியை கடந்து செல்ல ரூ.15 முதல் ரூ.25 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத சலுகை கட்டணமாக ரூ.150 முதல் ரூ.300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாதாந்திர சலுகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.3,595-ம், இலகு ரக மோட்டார் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், மினி பஸ் ஆகியவற்றிற்கு ரூ.6,290-ம், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ.12,580-ம், பல ஆக்சில் கொண்ட வாகனங்களுக்கு ரூ.20,200-ம் மாதாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story