விழுப்புரத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்
இந்தி திணிப்பை கண்டித்து விழுப்புரத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த, மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், ஒரே பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் நாளை (அதாவது இன்று) காலை 10 மணியளவில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியின் 15-வது அமைப்பு தேர்தலில் தலைவராக மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் புஷ்பராஜ், முருகன், நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, கல்பட்டு ராஜா, முருகன், முருகவேல், பிரபாகரன், முருகன், வேம்பிரவி, ஜெய.ரவிதுரை, உள்பட பலர் கலந்துகொண்டனர்.