தமிழகத்தில் இன்று 33-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இன்று 33-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தலா ஒரு வார்டுக்கு 10 வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், ஈரோடு, மதுரை, கரூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரேனா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றன. ஏற்கனவே 2 டோஸ் போட்டவர்களுக்கு 33-வது தடுப்பூசி முகாமில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்திவுள்ளது.