சதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை


சதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை
x

சதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது பிரதோஷம், அமாவாசை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை காட்டிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அமாவாசை திருவிழா

அதேபோல இந்த ஆண்டு இன்று ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது.

இன்று ஆடி அமாவாசை தினத்தன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாகனங்கள் நிறுத்த இடம்

மேலும் சதுரகிரிக்கு செல்லும் வாகனங்கள், பேரையூர் சாப்டூர் வழியாகவும் அழகாபுரி, கிருஷ்ணன் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் வாகனங்கள் தாணிப்பாறை அருகே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தும்படி போக்குவரத்து போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

வனத்துறை சார்பில் குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிக்கு பாலித்தீன் பைகளை எடுத்து செல்ல வேண்டாம்.

முன்னேற்பாடு பணிகள்

அதேபோல குப்பைகளை போட வேண்டாம் என வனத்துறையினர் கூறினர். பக்தர்களின் நலன் கருதி ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story