கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை
அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அழகு மீனா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆன்மிகத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவின் பிறந்த தினத்தை ஒட்டி இன்று (செவ்வாய் கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய வட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 20.08.2024 இன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக (14.09.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி மூன்று வட்டங்களில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story