தங்கம் விலை சவரனுக்கு 51ஆயிரத்தை கடந்தது...சாமானிய மக்கள் அதிர்ச்சி


தங்கம் விலை சவரனுக்கு 51ஆயிரத்தை கடந்தது...சாமானிய மக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 1 April 2024 5:02 AM GMT (Updated: 1 April 2024 5:36 AM GMT)

தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று வரலாறு காணாத அளவு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.680 உயர்ந்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,455-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.81.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story