விடுமுறை தினமான இன்று, காசிமேடு மீன்பிடி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்..!
சென்னை காசிமேடு மீன் சந்தையில் அசைவப்பிரியர்கள் குவிந்தனர்.
சென்னை,
சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் இன்று அதிகாலை முதலே மீன்கள் வாங்க மீன்பிரியர்கள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. வார விடுமுறை நாள் மற்றும் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் மீன்கள் வாங்க குவிந்தனர். இதனால், மீன் சந்தை களைகட்டியது.
மேலும், சந்தைக்கு மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மீன்களின் விலையும் அதிகரித்து கானப்பட்டது. வஞ்சிரம்-ரூ.1,100-1,250 வரை விற்பனை செய்யப்பட்டது. வவ்வால் வெள்ளை- ரூ.1,300, சங்கரா பெரியது- ரூ.450, கடம்பா பெரியது- ரூ.400, இறால்- ரூ.450, நண்டு-ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story