ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
களம்பூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
ஆரணி
களம்பூரில் இருந்து சந்தவாசல் செல்லும் பகுதியில் களம்பூர் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன்கள் சுரேஷ்பாபு, ஆனந்தபாபு (வயது 26) ஆகிய இருவரும் ஜெனரல் ஸ்டோர் நடத்தி வருகின்றனர்.
இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.
அதன்பேரில் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், பிரபாகரன் மற்றும் போலீசார் அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பண்டல், பண்டலாக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கடையில் இருந்த ஆனந்தபாபுவை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சுரேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
Related Tags :
Next Story