"அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை" - மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்
அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என்று மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படடும் சி.ஜி.எல் (CGL) தேர்வுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-
"பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை." என்று தெரிவித்துள்ளார்.