பெண்ணிடம் நூதன முறையில் தங்க சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் நூதன முறையில்   தங்க சங்கிலி பறிப்பு
x

பெண்ணிடம் நூதன முறையில் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

திருச்சி

கட்டிட வேலை தருவதாக கூறி அழைத்து சென்று பெண்ணிடம் நூதன முறையில் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

கட்டிட தொழிலாளி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள விட்டமாபட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 48). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று திருச்சிக்கு வேலை தேடி சென்றார். அப்போது, அவரை சந்தித்த ஒரு பெண்ணும், ஆணும் நாங்கள் கணவன்-மனைவி என்றும், கட்டிட பணிகள் செய்து வருவதாகவும் கூறினர். மேலும் உங்களுக்கு வேலை தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் சின்னம்மாளை ஏற்றி சென்றனர். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி சின்னம்மாளுக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர்.

நகை பறிப்பு

அதன் பின்னர் தண்ணீரை குடித்த சின்னம்மாள் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அவரிடம் இருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.

இந்த நிலையில். மயக்கம் தெளிந்த சின்னம்மாள் எழுந்து கழுத்தை பார்த்தபோது, நகை பறிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆனாலும் அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். இது பற்றி அவர் அக்கம்பக்கதினரிடம் பதறியபடி தெரிவித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story