விபத்து ஏற்படுத்திய வக்கீலுக்கு 18 மாதம் சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு


விபத்து ஏற்படுத்திய வக்கீலுக்கு 18 மாதம் சிறை - திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு
x

கனகம்மாசத்திரம் அருகே விபத்து ஏற்படுத்திய வக்கீலுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து திருத்தணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே உள்ள சீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரென்னிஸ் (வயது 35). இவர் திருத்தணி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டிலிருந்து சீத்தாபுரம் காலனி வழியாக காரில் சென்ற போது அதே கிராமத்தை சேர்ந்த வீரப்பன் (வயது 55) என்பவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த வீரப்பன் உயிரிழந்தார். இதையடுத்து வீரப்பனின் மகன் விஜயன் திருத்தணி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக திருத்தணி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் நீதிபதி முத்துராஜ் விபத்து ஏற்படுத்திய ரென்னிஸ்க்கு 18 மாத சிறை தண்டணையும், ரூ.1,500 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.


Next Story