கலெக்டரிடம் கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் மனு
நெல்லை கலெக்டரிடம் கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் மனு கொடுத்தனர்.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரிந்த சித்ரா தேவி, விஜயலட்சுமி, விஜி உள்பட 26 பேர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது:-
நாங்கள் கடந்த 2½ ஆண்டுகளாக கொரோனா தொற்று காலத்தில் கொரோனா பணி செவிலியராக பணிபுரிந்தோம். கொரோனா நோயாளிகள் மட்டுமல்லாமல் மற்ற நோயாளிகள் பிரிவிலும் வேலை செய்தோம்.
இந்த நிலையில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி எங்களை பணி நிறுத்தம் செய்து உள்ளனர். எங்களை பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த 5 மாதங்களாக சம்பளம் இல்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் வேலை செய்து வருகிறோம்.
எனவே பணி நிறுத்தம் செய்யப்பட்ட ஆணையை ரத்து செய்து, எங்களை தொடர்ந்து பணியில் ஈடுபட உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.