திருச்செந்தூரில் சிறுவர் பூங்கா அமைக்க நுகர்வோர் பேரவை கோரிக்கை


திருச்செந்தூரில் சிறுவர் பூங்கா அமைக்க நுகர்வோர் பேரவை கோரிக்கை
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் சிறுவர் பூங்கா அமைக்க நுகர்வோர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம், நகராட்சி ஆணையர் கண்மணியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூரில் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். இதை முதியோர் நடைபயிற்சி செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மாதந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்கும் விடுதி அமைக்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வரும் நேரத்தை கரும்பலகையில் எழுதி தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டது. அப்போது, திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துள்ளா, நகர தலைவர் ராஜமாதங்கன், காயல்பட்டினம் நகர அமைப்பாளர் மூசா நைனா, ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story