வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி - 2 பேர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி - 2 பேர் கைது
x

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் சக்திநாதன். இவர் ஆன்லைனில் வேலைக்காக பதிவு செய்திருந்தபோது அதில் இருந்த முகவரியை வைத்து போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி போலியான பணி நியமன ஆணை தயாரித்து மின்அஞ்சல் மூலம் அனுப்பி நம்பவைத்தனர்.

மேலும் ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 35-ஐ பெற்று கொண்டு மோசடி செய்ததாக செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சக்திநாதன் புகார் செய்தார்.

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் உள்ளிட்ட போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டெல்லியை சேர்ந்த நவீன்குமார் (வயது 24), ரூப்சந்த் (31) ஆகியோரை கைது செய்து மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.


Next Story