காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிசத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிசத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
x

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

ஈரோடு

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

நம்பியூர்

நம்பியூர் வட்டார தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளர் பூங்கோதை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,' ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி சிவப்பு மையால் கையெழுத்திட்டனர்.

மொடக்குறிச்சி- டி.என்.பாளையம்

இதேபோல் மொடக்குறிச்சியில் சிவப்பு மையால் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் அருள் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர்.கோமதி வரவேற்று பேசினார். சங்க மாநில துணைத்தலைவர் மூர்த்தி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்டார தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டு சிவப்பு மையால் கையெழுத்திட்டனர். முடிவில் பொருளாளர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

டி.என்.பாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் டி.என்.பாளையம் ஒன்றிய தலைவர் வி.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் சிவப்பு மையால் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

பவானிசாகர்

பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பவானிசாகர் வட்டத் தலைவர் சரிதா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 60 பெண்கள் உள்பட 120 பேர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story