மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 25,297 பேர் எழுதினார்கள் 4,998 பேர் வரவில்லை


மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 25,297 பேர் எழுதினார்கள்  4,998 பேர் வரவில்லை
x

நெல்லை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 25,297 பேர் எழுதினார்கள்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 25,297 பேர் எழுதினார்கள்.

முதல்நிலை தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி -2 முதல் நிலை தேர்வு நேற்று நடத்தப்பட்டது.இதற்காக நெல்லை மாவட்டத்தில் 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 30,295 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் நெல்லை தாலுகாவில் 6,245 பேர், அம்பை பகுதியில் 3,500 பேர், சேரன்மாதேவி பகுதியில் 1,972 பேர், பாளையங்கோட்டையில் 13,580 பேர் என மொத்தம் 25 ஆயிரத்து 297 பேர் தேர்வு எழுதினார்கள். 83.50 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். மீதம் 4,998 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கண்காணிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, வீரவநல்லூர் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் 113 ஆய்வுக்குழு, 13 பறக்கும் படை, 27 சுற்றுக்குழு அலுவலர்கள் இந்த தேர்வை கண்காணித்தனர். 117 வீடியோ கிராபர்கள் மூலம் தேர்வு மையங்களில் முறைகேடு நடக்காமல் இருக்கும் வகையில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்றது.

தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.


Next Story