டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 7 பேருக்கு பணிநியமன ஆணை


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 7 பேருக்கு பணிநியமன ஆணை
x

மாவட்ட மைய நூலகத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 7 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயின்ற 7 பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணிநியமன ஆணை பெற்றுள்ளனர். இதில் கரூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக அருண்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வரித்தண்டலராக லாவண்யா, வேளாண்மைத்துறையில் இளநிலை உதவியாளர்களாக வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், போக்குவரத்துத்துறையில் இளநிலை உதவியாளராக தீபன், கைத்தறித்துறையில் இளநிலை உதவியாளராக இளவரசன், வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலராக விக்னேஷ் ஆகிய 7 பேர் பணி நியமன ஆணையை பெற்றுள்ளனர். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நூல்களை பரிசாக வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story