த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஹூசைன் மன்பஈ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் தன்னுடைய டுவிட்டரில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்புரை செய்த முன்னாள் பா.ஜனதா டெல்லி ஊடக பிரிவைச் சேர்ந்த நவீன் ஜின்டால் ஆகியோர் மீது மக்களைப் பிளவுபடுத்தி வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பரப்புரை செய்ததற்காக பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு (யு.ஏ.பி.ஏ.) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும். அல்லது யு.ஏ.பி.ஏ. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஜாவித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜமால், துணைத்தலைவர் காஜா, மாநில இளைஞரணி துணைத்தலைவர் ரியாசூர் ரகுமான், மாவட்ட துணை செயலாளர்கள் காஜா, கம்புகடை ரசூல், மாஹீன், பெஸ்ட் ரசூல், வீரை நவாஸ் மற்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.