திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வசூல்


திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வசூல்
x

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வசூல் காணிக்கையாக கிடைத்தது.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 நாட்களாக திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் 44 நாட்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 73 லட்சத்து 71 ஆயிரத்து 106 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 964 கிராம், வெள்ளி 14 கிலோ காணிக்கையாக கிடைத்தது. இதேபோல் கோவில் திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 194 வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story