திருப்பூர் விபத்து; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு


திருப்பூர் விபத்து; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
x

திருப்பூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், மைவாடி கிராமம், கருப்பசாமிபுதூர் புதிய புறவழிச்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை கோட்டம், மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமம், கருப்பசாமிபுதூர் புதிய புறவழிச்சாலையில் நேற்று (08.10.2024) இரவு சுமார் 11.30 மணியளவில் பழனியிலிருந்து கேரளாவை நோக்கி சென்ற சுற்றுலா வாகனமும், உடுமலைப்பேட்டையிலிருந்து பழனி நோக்கிச் சென்ற நான்குசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்குசக்கர வாகனத்தில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், இந்திரா நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமதி.மனோன்மணி (வயது 65), திரு.தியாகராஜன் (வயது 45), திருமதி.பிரீத்தி (வயது 40) மற்றும் சிறுவன் ஜெயப்பிரியன் (வயது 12) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் திரு.நாட்ராயன் (வயது 80) அவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் திரு.நாட்ராயன் (வயது 80) அவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story