திருப்பரங்குன்றம் பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு, அங்கன்வாடி மையத்தில் சுகாதாரகேடு- யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்


திருப்பரங்குன்றம் பகுதியில்  குடிதண்ணீர் தட்டுப்பாடு, அங்கன்வாடி மையத்தில் சுகாதாரகேடு- யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
x

திருப்பரங்குன்றம் யூனியனில் உள்ள ஊராட்சிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாடு, அங்கன்வாடி மையத்தில் சுகாதார கேடு நிலவுகிறது என்று யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் யூனியனில் உள்ள ஊராட்சிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாடு, அங்கன்வாடி மையத்தில் சுகாதார கேடு நிலவுகிறது என்று யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர்.

யூனியன் கூட்டம்

திருப்பரங்குன்றம் யூனியன் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் வேட்டையன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, ஒன்றிய குழு துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதங்கள் வருமாறு:

கவுன்சிலர் ராஜேந்திரன்: சிலைமான் ஊராட்சியில் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பஸ் மறியல் செய்திருக்கிறார்கள். அதிகாரியின் அலட்சியப் போக்கினால் ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதற்காக வேதனைபடுகிறேன்.

சுகாதாரம் கேள்விகுறி

கவுன்சிலர் ஆசைதம்ப: நாகமலைபுதுக்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட அங்கன்வாடி மைய வளாகம் முழுவதுமாக குப்பை குவியலாக கிடக்கிறது. அதனால் சுகாதாரம் கேள்விகுறியாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு மர்ம நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் கூறினேன். ஆனால் நடவடிக்கை இல்லை என என்று கூறியபடியே செல்போனில் அங்கன்வாடி மையவாசலில் குவிந்துள்ள குப்பை புகைப்படத்தை காண்பித்தார். அங்கன்வாடிக்கு மின்கட்டணம் கூட செலுத்தவில்லை.

வட்டார வளர்ச்சி அலுவலர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பேப்பரில் எழுதிய "சீனி" இனிக்காது

கவுன்சிலர் ஆசைதம்பி : வெள்ளை பேப்பரில் சீனி என்று எழுதினால் இனிக்காது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு நடந்த மன்ற கூட்டத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினேன். அப்பவும் இதே பதிலை தான் சொன்னீர்கள். ஆனால் நடவடிக்கைதான் இல்லை.

கவுன்சிலர் நிலையூர் முருகன்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது. அதேபோல. ஊராட்சி ஒன்றிய குழு பிரதிநிதிகளுக்கு சம்பளம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இதை அரசு கவனத்திற்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கவுன்சிலர் ஆசை தம்பி: வணிக வளாகத்தில் உள்ள 19 கடைகளுக்கும் வாடகை நிலுவை இல்லாதபோது டெண்டர் விடுவதில் தாமதம் ஏன்? கலெக்டர் சொல்லியும் கேட்கவில்லை.யார் சொன்னால் கேட்பீர்கள். ஆணையாளர்: நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.


Next Story