திருமருகலில், இளநீர் விற்பனை படுஜோர்


திருமருகலில், இளநீர் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுட்டெரிக்கும் வெயிலால் திருமருகல் பகுதியில் இளநீர் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

சுட்டெரிக்கும் வெயிலால் திருமருகல் பகுதியில் இளநீர் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

சுட்டெரிக்கும் வெயில்

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

இருப்பினும் அத்தியாவசிய வேலைகளுக்காக மட்டுமே பகல் நேரங்களில் வெளியே வந்து செல்கின்றனர். வெயில் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் நுங்கு, தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்களை பருகி வந்தனர். இந்த நிலையில் இளநீர் விற்கும் கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.

சாலையோரங்களில் இளநீர் கடை

இதனால் தற்போது இளநீர் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை ஓரங்களில் குடில்கள் அமைத்து அதிக அளவில் இளநீர் விற்பனை நடைபெற்று வருகிறது.

மேலும் இவ்வாறு சாலை ஓரங்களில் குளிர்பான கடைகள் இருப்பதால் கார், இரு சக்கரவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இளநீரை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இதனால் இளநீர் விற்பனையும் அதிகரித்து உள்ள நிலையில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story