காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x

காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கரூர்

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி சுவாமிகளுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடந்து சிறப்பு அலங்காரத்தில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.


Next Story