சின்னவடவாடிதிரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தீமிதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அம்மன் வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மாலை 3.30 மணியளவில் அர்ஜூணன், திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story