திருச்செந்தூர் டாக்டர்சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை
![திருச்செந்தூர் டாக்டர்சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை திருச்செந்தூர் டாக்டர்சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை](https://media.dailythanthi.com/h-upload/2022/11/08/967858-enggcollegdd.webp)
திருச்செந்தூர் டாக்டர்சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் உள் தர உறுதிப் பிரிவு மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் ஸ்பேஸ் சார்பில் திறன் மேம்பாட்டு திட்டம்- மொைபல் போன் சர்வீஸ் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவரும், துணை பேராசிரியருமான பெனோ, விருந்தினரை அறிமுகப்படுத்தி வரவேற்றார்.
கோவையை சேர்ந்த நியூ டெக்னாலஜி தொழில்நுட்பவியலாளர் பா.கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி பட்டறையின் முன்னுரையை வழங்கினார். தொழில்நுட்பவியலாளர் சஜித், மொபைல் போன் சேவை மற்றும் அதன் உதிரி பாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், அதன் செயல்முறை வகுப்புகளையும் நடத்தினார். மாணவர்கள் தங்கள் மொபைல்களில் ஏற்படும் பழுதுகளை தாங்களே சரிசெய்து கொள்ளும் வண்ணம் வழிமுறைகளை எடுத்துரைத்து அதற்கான பயிற்சிகளையும் வழங்கினார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான சு.டார்வின் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.