திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா
திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் மேலத்தெரு சுடலைமாட சுவாமி கோவில் கொடைவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் கொடைவிழா
திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று விமரிசையாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முகவிலாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக ரதவீதி வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடந்தது.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. இன்று (புதன்கிழமை)அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது.
கலந்து கொண்டவர்கள்
விழாவில், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், நகர தி.மு.க. செயலாளர் வாள்சுடலை, அ.தி.மு.க. திருச்செந்தூர் முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி, என்ஜினீயர் நாராயணன், தொழில் அதிபர்கள் வீரபாகு, கே.சுப்பையா, எஸ்.வீரக்கன், லெட்சுமணன், நட்டார், ஆர்.ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் ஆர்.சண்முகசுந்தரி, ஓ.எஸ்.ஏ.பாலசுப்பிரமணியன், ஓ.எஸ்.எம்.ராமகிஷ்ணன், தி.கண்ணன், சி.குமரகுருபரன், ஒயிட் எஸ்.கண்ணன், எம்.பாலசுப்பிரமணியன், சக்தி கிட்டப்பா, என்.சுப்பிரமணியன், மு.ஐயப்பன், டெக்கரேசன் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.