திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு


திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா தெற்கு மாவட்டம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செட்டியாபத்து, தேரிக்குடியிருப்பு, காயாமொழி, வள்ளுவன்நகர், சண்முகபுரம், நா.முத்தையாபுரம் பகுதிகளில் 7 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டிருந்தன. இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள், தீபாராதனை நடந்தது. நேற்று இந்த விநாயகர் சிலைகள் காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் திடலில் இருந்து தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டன. ஊர்வலத்தை மாநில துணை செயலாளர் ரவிக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விநாயகர் சிலைகள் மத்திமான்விளை, காந்திபுரம் வழியாக திருச்செந்தூர் வந்தடைந்தன. அங்குள்ள ரதவீதி வழியாக ஊர்வலமாக கொண்டு ெசல்லப்பட்ட விநாயகர் சிலைகள் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அனுமன் சேனா மாவட்ட தலைவர் தங்கராஜ், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் நெல்லை காத்திகேயன், மாவட்ட பொது செயலாளர் தங்கராஜா, மாவட்ட செயலாளர் லிங்கவேல் ஆதித்தன், மாவட்ட துணை செயலாளர் முருகபெருமாள், உடன்குடி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன். திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ராஜா, செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story