திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா ஆலோசனை கூட்டம்


திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 500 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் குருச்சந்திரன் தலைமை தாங்கினார். கோவில் இணை ஆணையர் கார்த்திக், நகராட்சி தலைவர் சிவஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திருவிழா நாட்களில் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்வது, திருவிழா காலங்களுக்கு முன்பாக நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகள் அனைத்தையும் சரிசெய்வது, தடையில்லா மின்சாரம் வழங்குவது, பக்தர்களின் பாதுகாப்பு கருதி 500 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஆவணி திருவிழா முக்கிய நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக 150 பஸ்கள் இயக்குவது, திருவிழா காலங்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அவர்களது முதுகுப்பகுதியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் எதிரொலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், திருச்செந்தூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், தாசில்தார் வாமனன், நகராட்சி ஆணையாளர் கண்மணி, கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி, மின்சார வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வகுமார், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் பாசி நுகு, சுகாதார ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், செல்வகுமார், அரிஸ்டாட்டில், செல்லபாண்டி, மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்சன் மாசிலாமணி, கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன், கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் சிவநாதன், கோவில் பணியாளர்கள் ராஜ்மோகன், பேஸ்கார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story