திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடி கிடைத்தது. மேலும் 2¾ கிலோ தங்கமும் செலுத்தி இருந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடி கிடைத்தது. மேலும் 2¾ கிலோ தங்கமும் செலுத்தி இருந்தனர்.
உண்டியல் காணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில் எண்ணப்பட்டன.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.
ரூ.3 கோடி
தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 2 கிலோ 800 கிராமும், வெள்ளி 25 கிலோவும், 292 வெளிநாட்டு பணமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.