சேலம் வழியாக செல்லும் 16 ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றம்


சேலம் வழியாக செல்லும் 16 ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றம்
x

சேலம் அருகே வருகிற 4-ந் தேதி பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி சேலம் வழியாக செல்லும் 16 ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் அருகே வருகிற 4-ந் தேதி பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி சேலம் வழியாக செல்லும் 16 ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

பாலம் பராமரிப்பு பணி

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் - மேக்னசைட் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலத்தில் வருகிற 4-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும் கீழ்கண்ட ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 13352) ஆலப்புழா ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 3 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். இதேபோல் எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 3 மணி நேரம் கால தாமதமாக புறப்படும்.

சதாப்தி எக்ஸ்பிரஸ்

கோவை -சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (12244) கோவையில் இருந்து மாலை 3.05 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 1.30 மணி நேரமும், கோவை எக்ஸ்பிரஸ் (12676) ரெயில் கோவையில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்படுவதற்கு பதில் 1.30 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (16340) நாகர்கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு பதில் 2 மணி நேரம் காலதாமதமாக புறப்படும், சேலம் ஜங்ஷன்- அரக்கோணம் ரெயில் (16088) மாலை 3.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 4 மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும்.

ஜோலார்பேட்டை- ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (06411) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1.30 மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.

வழியில் நிறுத்தப்படும் ரெயில்கள்

இதேபோல் கீழ்கண்ட 9 ரெயில்கள் வழியில் உள்ள ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் குறிப்பிட்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். ராஜ்கோட் - கோவை எக்ஸ்பிரஸ் (16613) 1.30 நிமிடமும், கொச்சுவேலி- கோர்பா எக்ஸ்பிரஸ் (22648) 40 நிமிடமும், பெங்களூரு- கோவை உதய் எக்ஸ்பிரஸ் (22665) 45 நிமிடமும், சென்னை சென்ட்ரல்- மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (22637) 20 நிமிடமும், டாட்டா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (18189) 20 நிமிடமும், திருவனந்தபுரம் செகந்தராபாத் சபரி எக்ஸ்பிரஸ் (17229) 20 நிமிடமும், சென்னை சென்டிரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (12679) 20 நிமிடமும், திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் (22615) 20 நிமிடமும், சென்னை சென்டிரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (12695) 15 நிமிடமும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும்.

மேற்கண்ட தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story