லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு


லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு
x

லாரிகள் செல்ல நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் நகரை சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட சிமெண்டு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு கனிம வளங்களையும், சிமெண்டு மூட்டைகளையும் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் இறந்தனர். மேலும் பல்வேறு விபத்துகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். ஏற்கனவே பள்ளிக்கு குழந்தைகள் வந்து செல்லும் நேரங்களில் ஆலைகளுக்கு வரும் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3.30 மணியில் இருந்து 5.56 மணி வரையிலும், நகரிலும் மற்றும் புறவழிச்சாலைகளிலும் லாரிகள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. ஆனால் தற்போது சில ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்ட நேரத்தில் விதியை கடைப்பிடிக்காமல் அதிவேகமாக சென்று வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் வருவாய்த்துறையினர், போலீசார், போக்குவரத்து துறையினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, அவர்கள் மீது வழக்குகள் பதியப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story