அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு
பசும்பொன்னில் இன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி-குருபூஜை விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். அவர்களுக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பசும்பொன்னில் இன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி-குருபூஜை விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். அவர்களுக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தேவர் குரு பூஜை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் தேவரின் ஆன்மிக விழாவும், நேற்று தேவரின் அரசியல் விழாவும் நடந்தது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக அரசு சார்பில் தேவர் ஜெயந்திவிழா, குருபூஜை நடக்க இருக்கிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க., ம.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.
இதற்கான நேரம் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அமைச்சர்கள்-உதயநிதி ஸ்டாலின்
காலை 9 மணிக்கு தமிழக அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் மரியாதை செலுத்தப்படுகிறது.
அமைச்சர்கள் துரைமுருகன், கேன்.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம்-அண்ணாமலை
காலை 10 மணிக்கு மூர்த்தி தேவர் தலைமையில் பசும்பொன் முன்னேற்ற கழகம், 10.15 மணிக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம், 10.30 மணிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,
10.45 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர், 11 மணிக்கு ம.தி.மு.க.வினர்் தலைவர் வைகோ, பொதுச்செயலாளர் துரை வைகோ தலைமையில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.. 11.15 மணிக்கு மூவேந்தர் முன்னணி கழகத்தினர், 11.30 மணிக்கு தமிழ்நாடு தேவர் பேரவையினர்,
11.45 மணிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மர் எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,
12 மணிக்கு பா.ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட செயலாளர் கதிரவன் மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்துகின்றனர்.
பல்வேறு கட்சிகள்-அமைப்புகள்
12.15 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி, 12.30 மணிக்கு முக்குலத்தோர் புலிப்படை, 12.45 மணிக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நிறுவன தலைவர் தனியரசு, மதியம் 1 மணிக்கு தென்னாடு மக்கள் கட்சி தலைவர் கணேஷ் தேவர், 1.15 மணிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்துகின்றனர். 1.30 மணிக்கு தேவரின் மக்கள் பாதுகாப்பு படை, முக்குலத்தோர் பாதுகாப்புபடை, 1.45 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழ் மாநில குழுவினர், 2 மணிக்கு தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, 2.15 மணிக்கு அ.தி.மு.க. வக்கீல்கள் அணி, 2.30 மணிக்கு அகில இந்திய முக்குலத்ேதார் பாசறை, 2.45 மணிக்கு நாம் தமிழர் கட்சி,
3 மணிக்கு அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம், 3.10 மணிக்கு பசும்பொன் தேசிய கழகம், 3.20 மணிக்கு மறத்தமிழர் சேனை, 3.30 மணிக்கு அனைத்து இந்திய பார்வர்டு பிளாக் (சுபாசிஸ்ட்), 3.40 மணிக்கு ஜனநாயக பார்வர்டு பிளாக், 3.50 மணிக்கு அகில இந்திய மருதுபாண்டியர் பேரவையினர் மரியாதை செலுத்துகின்றனர்.
4 மணிக்கு முத்துராமலிங்க தேவர் நினைவுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், 4.10 மணிக்கு மனித உரிமை காக்கும் கட்சி, 4.20 மணிக்கு பாரதீய பார்வர்டு பிளாக், 4.30 மணிக்கு ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி, 4.40 மணிக்கு தமிழ் மாநில சிவசேனா கட்சி, 4.50 மணிக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, 5 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்வி அறக்கட்டளையினர் மரியாதை செலுத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.