உழவார பணி


உழவார பணி
x

நெல்லையப்பர் கோவிலில் உழவார பணி நடந்தது.

திருநெல்வேலி

இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் நெல்லையில் உள்ள 25 கோவில்களில் உழவாரப்பணி நடைபெற்று வருகிறது. இந்த குழுவின் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் கிளை சார்பில் நேற்று நெல்லையப்பர் கோவிலில் மகா உழவார பணி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் நெல்லையில் உள்ள 25 கோவில்களில் நேற்று 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலம் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.


Next Story