மனைவியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மனைவியை கொன்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் தேவர்குளம் மலைகோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 27). இவருடைய மனைவி சவுந்தரவள்ளி (25). குடும்ப பிரச்சினை காரணமாக சவுந்தரவள்ளியை அரிவாளால் செல்வகுமார் வெட்டிக் கொலை செய்தார். இதுதொடர்பாக செல்வகுமாரை போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் செல்வகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு இந்த பரிந்துரையை ஏற்று செல்வகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.
Related Tags :
Next Story