வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதியவர் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 70). இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான குலசேகரன்பட்டினம் கச்சேரி தெருவை சேர்ந்த முத்தையா மகன் சின்னத்துரை (25) என்பவரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சின்னத்துரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று சின்னத்துரையை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சின்னத்துரையை கைது செய்ததற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் உள்பட 76 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


Next Story