வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
புதுக்கோட்டையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பஸ் நிறுத்தம் பகுதியில் கூட்டாம்புளி தெற்கு தெருவை சேர்ந்த சிவலிங்கம் மகன் வெங்கடேசன் (வயது 43) என்பவர் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் காளியப்பன் என்ற காடை காளியப்பன் (29) உள்ளிட்ட சிலர் வெங்கடேசனிடம் பணம் கேட்டு தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காளியப்பனை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காளியப்பனை கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.