வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை சேர்ந்த சம்பத்குமார் என்பவரின் மகன் ஸ்ரீ வினோத் (வயது 28). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீ வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் ஸ்ரீ வினோத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருக்கும் ஸ்ரீ வினோத்திடம் அதற்கான நகலை போலீசார் வழங்கினார்கள்.


Next Story