அடிதடியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


அடிதடியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் அடிதடியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி புதுக்கிராமம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 44). இவர் பாப்பாக்குடி பகுதியில் அடிதடி வழக்குகளில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விஷ்ணு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.


Next Story