அக்னிபாத் திட்டத்தில் சேர இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம்


அக்னிபாத் திட்டத்தில் சேர இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம்
x

அக்னிபாத் திட்டத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்

அக்னிபாத் திட்டத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வருகிற 17-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இணைய வழி தேர்வு அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் நடத்தப்படும். 2003 ஆண்டு ஜூன் 27, அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் 2006 ஆண்டு டிசம்பர் 27 அல்லது அதற்குமுன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி

கல்வி தகுதியை பெறுத்தவரை 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் மொத்தமாக 50 சதவீதமும், ஆங்கிலத்தில் 50 சதவீதமும் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ விளம்பர அறிவிப்பை பார்க்கவும். உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய 3 நிலைகளை உடையது.

வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) அன்று காலை 11 மணியளவில் திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story