செல்போன் செயலி மூலம் தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு
செல்போன் செயலி மூலம் தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேடு செய்யும் பணியை மாநகராட்சி மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு 4 மண்டலங்களில் பயோ மெட்ரிக் மூலம் தற்போது வருகை பதிவேடு எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வருகை பதிவேடு முடிவடைந்து தூய்மை பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு சென்று, தூய்மை பணிகளை மேற்கொள்ள கால தாமதம் ஏற்படுகிறது. அதனை சரிசெய்யும் வகையில், நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கும் செல்போன் செயலி மூலம் வருகை பதிவேட்டினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மேலப்பாளையம் மண்டலம் தியாகராஜநகர் 19-வது வார்டில் நவீன மயமாக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கான வருகை பதிவேடு செல்போன் செயலி செயல்பாட்டினை மாநகராட்சி மேயர் சரவணன் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story