பவுர்ணமி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா


பவுர்ணமி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா
x

பவுர்ணமி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பவுர்ணமி அறக்கட்டளை சார்பில் சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா, உயர் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு அறக்கட்டளை ஆயுட்கால அறங்காவலரும், பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளரும், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வல்லுனர் குழுவின் உறுப்பினருமான தங்கபிரகாசம் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாரிமுத்து வரவேற்று பேசினார். விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்கான ஆலோசனைகள் குறித்து அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜெகதீஷ்குமார், பேராசிரியர் சவுந்தரராஜன், சேலம் மாவட்ட ஆவின் பொது மேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரியுமான விஜய் பாபு, கோவை ஜி.எஸ்.டி. துணை இயக்குனர் பிரகாஷ் ஐ.ஆர்.எஸ்., எழுத்தாளர் மதிவண்ணன், பேராசிரியர்கள் சரவணன், ராமஜெயம், பவுர்ணமி அறக்கட்டளை செயலாளர் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் அசோகன், குருநாதன் ஆகியோர் பேசினர். மேலும் விழாவில்அருந்ததியர் சமூக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைக்கும் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தை தங்கபிரகாசம் தொடங்கி வைத்தார். அருந்ததியர் சமூகத்தில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக அம்பேத்கர், பெரியார் பற்றிய பேச்சு போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story