முப்பெரும் விழா


முப்பெரும் விழா
x
தினத்தந்தி 18 July 2023 12:30 AM IST (Updated: 18 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் முப்பெரும் விழா நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

புளியங்குடியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி திருவிழா, ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தி.மு.க. அயலக அணி இணைச்செயலாளரும், நாடார் மகாஜன சங்க அச்சக செயலருமான எஸ்.ஜே.மகா கிப்சன் தலைமை தாங்கினார். புளியங்குடி நாடார் உறவினர் முறை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சி.என்.பண்டாரக்குட்டி வரவேற்றார். முன்னதாக காமராஜரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சௌந்தரபாண்டியன், துணைத்தலைவர் அந்தோணிசாமி ஆகியோர் சிறப்பு பரிசுகள் வழங்கினர். தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகாலிங்கம், எம்.எஸ்.மதன் குரூப்ஸ் சுப்பிரமணியன், என்.எம்.எஸ்.விவேகானந்தன், திருப்பதி சிட்பண்ட் கணேசன், குறிஞ்சி மகேஷ், டாக்டர் மதுசூதனன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குருசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நலத்திட்ட உதவி ஏற்பாடுகளை கிங்மேக்கர் அறக்கட்டளை நிறுவன தலைவர் எஸ்.குருநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில், ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனார்த்தனன் நன்றி கூறினார்.


Next Story