பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் முப்பெரும் விழா
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 25-வது விளையாட்டு விழா, 75-வது சுதந்திர தின விழா மற்றும் நுண்கலை மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. அதையொட்டி நடந்த விளையாட்டு விழாவிற்கு கல்லூரி முதல்வர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, பரமக்குடி நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, நகர்மன்ற உறுப்பினர் ஜீவரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்னணுவியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் பிரசாத் ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நவாஸ்கனி எம்.பி. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சுழற் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். விளையாட்டுக் குழு செயலாளர் மோகன் குமார் நன்றி கூறினார். பின்பு அமுத பெருவிழா மற்றும் நுண்கலை மன்ற விழா நடந்தது. வரலாற்றுத்துறை தலைவர் கணேசன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்துகொண்டு கலைப்பிரிவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஞான திரவியம் சிறப்புரையாற்றினார். இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் நன்றி கூறினார். இதில் வேந்தோணி ஊராட்சி மன்றத்தலைவர் குழந்தை ராணி துரைராஜ், கல்லூரியின் துறைத் தலைவர்கள் அறிவழகன், ரேணுகாதேவி, செந்தில்குமார், கண்ணன், ஆஷாமும்தாஜ் பேகம், கிருஷ்ணவேணி, விஜயகுமார் உள்பட பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.