தஞ்சைக்கு இரை தேடி வருகை தந்த ஆயிரக்கணக்கான பறவைகள் - பிரமிப்புடன் பார்த்துச் செல்லும் மக்கள்
பறவைகள் நெல் மணிகள், பூச்சிகளை உட்கொண்டு, வானத்தில் வட்டமடித்து மகிழ்ச்சியாக பொழுது போக்கி வருகின்றன.
தஞ்சாவூர்,
தஞ்சை டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால், குறுவை சாகுபடியின் போது அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் நிறைந்து குளம் போல் காட்சியளிக்கின்றன.
இந்த வயல்வெளிகளில் ஆயிரக்கணக்கான கொக்கு, நாரை, வாத்து உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் தங்கள் இனத்துடன் கூட்டம் கூட்டமாக வருகை தந்து, அங்கு இருக்கும் நெல் மணிகள், பூச்சிகளை உட்கொண்டும், வானத்தில் வட்டமடித்தும் மகிழ்ச்சியாக பொழுது போக்கி வருகின்றன.
இவ்வாறு பறவைகள் பறந்து திரிவதை அப்பகுதி மக்கள் பிரமிப்புடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும் புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டவர்கள், அப்பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் பறவைகளை பல விதங்களில் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story