கோவில் கட்டவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் மனு


கோவில் கட்டவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 25 Jun 2023 12:30 AM IST (Updated: 25 Jun 2023 4:39 PM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே கோவில் கட்டவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் கடையநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீசில் மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றோம். எங்கள் ஊர் நாட்டாண்மைகள் தலைமையில் புதுக்குடியில் வடக்குத்தியம்மன் கோவில் கட்ட தொடங்கினோம். இந்த கோவிலுக்கு 6 அடி உயரத்திற்கு அடித்தளம் அமைத்தோம். தற்போது அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் சிலர் கோவிலை கடந்த 4 ஆண்டுகளாக கட்டவிடாமல் தடுத்து வருகிறார்கள். இதனையும் மீறி நாங்கள் கோவிலை கட்டி வருகிறோம். மேலும் கோவில் கட்டுவதை தடுப்பதற்கான வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, கோவிலை கட்டி கொடை விழா, கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story